Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் நாளை முதல் முதியோருக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு நாளை முதல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 40 இடங்களில் நாளை முதல் ஜூலை 31 வரை டோக்கன்கள் வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும். காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை புதுப்பித்தல், புதிய பயனாளிகள் தொடர்பான பணிகள் நடைபெறும். கோயம்பேடு, கிளாம்பாக்கம், சென்ட்ரல், தாம்பரம், பூந்தமல்லி உட்பட 40 இடங்களில் டோக்கன்கள் தரப்படும் என போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.