
தென்காசி: ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் போலீசாரின் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.