சென்னை: சென்னை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை மின்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஸ்ரீனிவாசனுக்கு 12 ஆண்டு சிறைதண்டனையுடன் ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.