சென்னை: தேசிய மருத்துவர் தினத்தையொட்டி ‘தன்னலமற்ற சேவைக்கு சொந்தக்காரர்களான மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாக தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி மகிழ்கிறோம். இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.
தன்னலமற்ற சேவைக்கு சொந்தக்காரர்களான மருத்துவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்: முதல்வர் வாழ்த்து
0