சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மாநில பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திடம் 5 மணி நேரம் விசாரணை நிறைவடைந்தது. சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மாநில பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆஜரானார். நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ரூ.4 கோடி பறிமுதல்: பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திடம் விசாரணை நிறைவு
201