மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் சீமான் தரப்பில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, திருச்சி நீதிமன்றத்தில் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.