சென்னை: சீமான், மே 17 இயக்க நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்குகளை முடக்க எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என சென்னை போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. சென்னை காவல்துறையை இவ்விவகாரத்தில் தொடர்புபடுத்தி தவறான தகவல் பரப்ப வேண்டாம். தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.