சென்னை : நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்துள்ளது. விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப போலீசார் முடிவு எடுத்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.