திருச்சி : திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரை முருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் மதுரையைச் சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்