சென்னை: சென்னை புறநகரில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து வருகிறார். ஆவடி. நசரத்பேட்டை, திருமழிசை, பூவிருந்தவல்லி உள்ளிட்ட புதிய மருத்துவமனைகளில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மருத்துவமனைகளில் சுகாதாரம், மருந்து இருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை பற்றி ககன்தீப் ஆய்வு செய்தார்.