தந்தை, மகன் உச்சகட்ட மோதலை தொடர்ந்து ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் அதே பொறுப்பில் நியமித்து அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இது ராமதாசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அன்புமணியின் ஆதரவாளர்களாக உள்ள அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்க முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு பதில் வன்னியர் சங்க காலத்தில் இருந்து கட்சிக்காக தீவிரமாக உழைத்து தற்போது பதவி எதுவும் இல்லாமல் இருப்பவர்களை பட்டியல் எடுத்து அவர்களுக்கு பதவி வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக நேற்று ஒரே நாளில் அன்புமணிக்கு ஆதரவாக உள்ள 9 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவரை அதிரடியாக நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அதோடு அந்த இடங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன்விவரம் வருமாறு:
நீக்கப்பட்ட 15 மாவட்ட செயலாளர்கள் விவரம்:
1. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் நீக்கம். அவருக்கு பதில் லோகநாதன் நியமனம்.
2. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி நீக்கம். அவருக்கு பதில் பரசுராமன் நியமனம்.
3. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக வடிவேல் முருகன் நியமனம் (காலியாக இருந்த மாவட்டம்)
4. திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் நீக்கம். அவருக்கு பதில் நாகேந்திரன் நியமனம்.
5. திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து நீக்கம். அவருக்கு பதில் ஜோதி முத்து நியமனம்.
6. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சன் முத்துகிருஷ்ணன் நீக்கம். அவருக்கு பதில் கோபிநாத் நியமனம்.
7. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி நீக்கம். அவருக்கு பதில் சுரேஷ் நியமனம்.
8. கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் நீக்கம். அவருக்கு பதில் சசிதரன் நியமனம்.
9. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நீக்கம். அவருக்கு பதில் ஜெகன் நியமனம்
10. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவகுமார் நீக்கம். அவருக்கு பதில் புகழேந்தி நியமனம்.
11. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அனந்த கிருஷ்ணன் நீக்கம். அவருக்கு பதில் கோவிந்தராசு நியமனம்.
12. அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தமிழ்மாறன் நீக்கம். அவருக்கு பதில் காடுவெட்டி ரவி நியமனம்.
13. மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருந்த பழனிச்சாமி நீக்கம். அவருக்கு பதில் சக்திவேல் நியமனம்.
14. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக இருந்த பச்சையப்பன் நீக்கம். அவருக்கு பதில் ஜோசுவா நியமனம்.
15. ஈரோடு மாநகர மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.ஆர்.ராஜி நீக்கம். அவருக்கு பதில் ஆறுமுகம் நியமனம்.
மாவட்ட தலைவர்கள்:
1. விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் தங்கஜோதி நீக்கம். அவருக்கு பதில் ஸ்டாலின் நியமனம்.
2. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திருப்பதி நீக்கம். அவருக்கு பதில் ரமேஷ் நியமனம்.
3. திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நீக்கம். அவருக்கு பதில் ஸ்ரீராம் நியமனம்.
4. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் பச்சையப்பன் நீக்கம். அவருக்கு பதில் ஜோஸ்வா நியமனம்.
ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக கோபால் நியமனம். ஏற்கனவே பாமகவின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சையத் மன்சூர் உசேனை ராமதாஸ் நியமனம் செய்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
* பாமகவுக்கு குரு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி: எம்எல்ஏ சதாசிவம்
பாமக தலைவர் அன்புமணி நேற்று சென்னை சோழிங்கநல்லூரில் 2வது நாளாக மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் பேசுகையில், பாமக கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் 40 தொகுதிகளுக்கு மேல் கேட்போம். கட்சியில் தற்போது நிலவும் குழப்பங்கள் நீர்க்குமிழி போல தற்காலிகமானவைதான், விரைவில் இது முடிவுக்கு வரும். பாமகவுக்கு குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என நல்ல காலம் தொடங்கியுள்ளது” என்றார்.