டெல்லி: செபி தலைவராக ஊதியம் பெறும் மாதவி, ஐசிஐசிஐயிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2017-ல் இருந்து இதுவரை ரூ. 16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக மாதவி பூரி புச் பெற்றுள்ளார். பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்தும் பணியை செயல்படுத்தி வருவது செபி எனப்படும் பங்கு, பரிவர்த்தனை வாரியம். அனைவரும் முதலீடு செய்யக்கூடிய பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்தும் முக்கிய பணியை செபி செய்கிறது. செபியின் முழு நேர அதிகாரியாக இருக்கும் மாதவி பூரி புச், ஐசிஐசிஐ வங்கியில் எப்படி ஊதியம் பெறலாம். செபியில் மாதவி பூரி புச் பணியாற்றுவது குறித்து தேதி வாரியாக விவரங்களை வெளியிட்டு பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.
செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
previous post