மும்பை: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 246 புள்ளிகள் சரிந்து 79,459 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 84 புள்ளிகள் குறைந்து 24,284 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.