டெல்லி: அதானி நிறுவன முறைகேடு புகாரில் சிக்கியுள்ள செபி தலைவர் மதாபி புச் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதானி முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து காங்கிரஸ் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.