டெல்லி: செபி தலைவர் மாதவி புச்சுக்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும், மாதவி புச்சுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் மாதவி புச் விவகாரம் குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்த உள்ளது. இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் தலைவராக உள்ள மாதவி புச், அதானி குழுமத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.