டெல்லி: செபி தலைவர் மாதவி பூரி புச் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 2017-லிருந்து 2021 வரை ரூ.16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக மாதவி பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. செபியின் முழுநேர உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே ஐசிஐசிஐ வங்கியில் இருந்து மாதவி பூரி ஊதியம் பெற்றுள்ளார். செபியின் முழு நேர உறுப்பினராக இருந்துகொண்டே ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஊதியம் பெற்றது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.