சென்னை: கடற்பாசி பூங்கா அமைக்க சிஎம்டிஏவுக்கு சென்னை மாநகராட்சி முன் நுழைவு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். அதன்படி சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயர் ஆர்.பிரியா தலைமை வகித்தார். இதில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் 2 இடங்களில் கடற்பாசி பூங்கா அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் 7 இடங்களில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் நிதியமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி சென்னை மாநகராட்சியில் 2 இடங்களில் கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடி, துரைப்பாக்கத்தில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க சிஎம்டிஏவுக்கு முன் நுழைவு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.