சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் தொடர்புடைய மேலும் 2 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேவநாதன் தொடர்புடைய 8 கட்டடங்களுக்கு இதுவரை சீல் வைத்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ். அடையாறு, வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூரில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்களுக்கு சீல். ஏற்கனவே 6 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் மயிலாப்பூரில் உள்ள 2 கட்டடங்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.