சென்னை: சீல் வைப்பது தொடர்பான நோட்டீசை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக வீடு, அலுவலகங்களுக்கு ED சீல் வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வீடு, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
அலுவலகம், வீடுகளுக்கு சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளுக்கு அமலாக்கத்துறை சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது?. வாதத்துக்கும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், சீலை அகற்றி விடுகிறோம்; நோட்டீஸை எடுத்து விடுகிறோம் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.
சீல் வைப்பது தொடர்பான நோட்டீசை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்..!!
0