சென்னை: கடல் பகுதி வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று காலை ‘சாகர் கவாச்’ என்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகையைக் கன்னியாகுமரி கடல் பகுதியில் தொடங்கினர். கோவளம் சின்னமுட்டம், மணக்குடி என 48 மீனவ கிராமங்களும் மற்றும் குமரி கடல் பகுதியிலும் அதி நவீன ரோந்து படகுகள், தொலைநோக்கு கருவிகள் மூலமாக இன்று 2வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.