இந்தியன் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Assistant: 15 இடங்கள். வயது: 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant (Finance): 12 இடங்கள். வயது: 35க்குள். தகுதி: வணிகவியல்/கணிதம்/புள்ளியியல் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம் 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ₹1000/-. எஸ்சி/எஸ்டி யினருக்கு ரூ.700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு சிபிடி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சென்னையில் தேர்வு நடைபெறும்.
https://www.imu.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2024.