திருச்சி: சிறுகனூர் அருகே காதலிக்க மறுத்த மாணவி மற்றும் அவரது தாயை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி வீட்டுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு இளைஞர் சண்முகவேல் கட்டாயப்படுத்தி உள்ளார். காதலிக்க மறுத்த மாணவியை தலையிலும், அதை தடுக்க சென்ற மாணவியின் தாயை கையிலும் சண்முகவேல் வெட்டியுள்ளார். புகாரை அடுத்து சண்முகவேலை சிறுகனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.