Wednesday, April 24, 2024
Home » சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவருக்கு ரயில்வேயில் வேலை

சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவருக்கு ரயில்வேயில் வேலை

by Porselvi

பணி: Clerk cum Typist (Scouts & Guides Quota Recruitment): 17 இடங்கள்.
சம்பளம்: ரயில்வே விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது: Level-I: 18 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு தலா 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
வயது: Level-II: 18 முதல் 33க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு தலா 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: Level-I: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Level-II: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படித்து அப்ரன்டிஸ் முடித்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதியுடன் Scouts & Guides அமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 2 சாரண, சாரணியர் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 2018 முதல் தற்போது வரையிலான என்எஸ்எஸ் பணி அனுபவம் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் Scouts & Guides அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே அலுவலகங்களில் கிளார்க் கம் டைப்பிஸ்ட் ஆக பணியமர்த்தப்படுவர். பணியில் சேர்ந்்த 2 வருடங்களுக்குள் ஆங்கில டைப்பிங்கில் ஜூனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/ திருநங்கைகள்/ சிறுபான்மையினருக்கு ₹250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.rrcmas.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2024.

You may also like

Leave a Comment

twenty − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi