காசா : இந்த உலகம் தன் மௌனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும் என்று ஸ்காட்லாந்து அமைச்சர் ஹம்ஸா யூசஃப் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது ஸ்காட்லாந்து அமைச்சர் ஹம்ஸா யூசஃப் தனது ‘X’ தளத்தில் பதிவில், “காசா மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது; தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிப்பு;இந்த உலகம் தன் மௌனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.