புழல்: சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அலமாதி ஊராட்சி எடப்பாளையம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டிடம், நல்லூர் ஊராட்சி காந்தி நகர் ராஜயோகி தெருவில் குழந்தைகள் அங்கன்வாடி மையம், சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடுதல், நெற்குன்றம் ஊராட்சி பள்ள சூரப்பட்டு, செக்கஞ்சேரி ஆகிய 2 கிராமங்களில் ரேஷன் கடை கட்டிடம், மேட்டு சூரப்பட்டு பகுதியில் முதல்வரின் காலை உணவுக்கூடம், நெற்குன்றம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஆகியவற்றின் திறப்பு விழா அந்தந்த பகுதிகளில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் சோழவரம் ஒன்றியக்குழு துணை தலைவரமான கருணாகரன் தலைமை தாங்கினார். சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, மாணிக்கம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்வாணன், அமிர்தவல்லி டில்லிபாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி துரைவேல், கோமதி சீனிவாசன், சோழவரம் வட்டார கல்வி அலுவலர் பால் சுதாகர், பள்ளி தலைமை ஆசிரியர் தாமரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.