திருவண்ணாமலை: ஆரணி டவுன் பகுதியில் சக மாணவனை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்தில் கழுத்தில் காயமடைந்த மாணவனுக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார்.
ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து
0