சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் மத்தூர் பள்ளியில் மனிதக்கழிவு பூசப்பட்டது மேலும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்த போது பல இடங்களில் மனிதக்கழிவு சிதறி கிடப்பதும், மது பாட்டில்கள் பரவிக் கிடப்பதும் தெரியவருகிறது.
அத்துடன் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. நாட்டிலேயே கல்வித்துறையில் சிறந்தோங்கும் தமிழ்நாட்டின் “கல்வி நற்கூறுகளை” மேலும் முன்னெடுக்க வேண்டுகிறோம். இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.