சென்னை : அதிக கட்டணம் வசூலித்த புகாரில் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முத்தமிழ் நகரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த ரூ.32,670க்கு பதில் ரூ.58,000 வரை கட்டணம் வசூலித்ததாக புகார் கூறப்படுகிறது. இன்று காலை 11 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அதிக கட்டணம் வசூலித்த புகாரில் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
0