லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல் தளத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். காலை நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்துத்துச் செல்வதற்காக முதல் மாடி பால்கனியில் மாணவர்கள் கூடியபோது, இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியின் பால்கனி சுவர் சரிந்து விபத்து : 40 குழந்தைகள் படுகாயம்
previous post