சென்னை: பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 4 சீருடைகள் வழங்கப்படும் என சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சீருடை தைப்பதற்கு பணியாளர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று அளவு எடுத்து தைப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இம்மாதத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கு 4 சீருடைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.