சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணப் பொருட்களை முதல்வர் வழங்கினார்.