பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சின்னகலையம்புத்தூரை சேர்ந்தவர் விஜயா (53). பழநி அருகே நெய்க்காரப்பட்டி அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, விஜயா இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சில காரணங்களால் பதவியிறக்கப்பட்டு ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் தலைமை ஆசிரியையாக இருந்த போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் சுமார் ரூ.6 லட்சம் வரை முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆசிரியை விஜயாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
உதவித்தொகையில் ரூ.6 லட்சம் முறைகேடு பள்ளி ஆசிரியை கைது
previous post