சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை, தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். சந்திரயான்-3 வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து அத்திட்டத்தின் இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளைப் பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் வழங்கி இருந்தார்.