புதுடெல்லி: கல்வி, வேலை வாய்ப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி விசிக தலைவர் திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின பிரிவினர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்று கடந்த 1ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் 1ம் தேதி வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் மனு
previous post