சென்னை : தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, 2022-23 நிதியாண்டில் ரூ.159 கோடி மட்டுமே என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் தெரியவந்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் 1,553 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23ம் நிதியாண்டில் 90% குறைக்கப்பட்டுள்ளது.