மதுரை : சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெறாத சூழலில் எவ்வாறு பணி நீட்டிப்பு செய்ய முடியும்? என்றும் அவர்கள் வினவியுள்ளனர். தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் : உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டம்
0
previous post