Sunday, April 14, 2024
Home » தேர்தல் பத்திரங்கள் விவரம் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் கேட்கிறது எஸ்.பி.ஐ: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தேர்தல் பத்திரங்கள் விவரம் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் கேட்கிறது எஸ்.பி.ஐ: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

by Ranjith

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கான சட்டம் கடந்த 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதற்கு எதிராக தொடரப்பட்ட நான்கு பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இதுதொடரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் சட்டத்தை ரத்து செய்தும், இந்த விவகாரத்தில் திரட்டப்பட்ட நிதியை, அளித்தவர்களிடமே அரசியல் கட்சிகள் உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்ப்பட்டது.மேலும் மார்ச் 6 ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும்.

மேலும் மார்ச் 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களும் இணையத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.பி.ஐ வங்கி தரப்பில்.ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

You may also like

Leave a Comment

nineteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi