நெல்லை : எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள் அதிகரித்திருப்பதாக நெல்லை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் எஸ்.பி.ஐ. பரிசுப் பொருள் பற்றிய பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்றும் கடந்த 3 மாதங்களில் மோசடி தொடர்பாக 73 புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் பெறப்பட்டுள்ளன என்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.