ஸ்டேட் வங்கியில் சர்க்கிள் பேஸ்டு ஆபீசர்ஸ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
1. சர்க்கிள் பேஸ்டு ஆபீசர்ஸ் (Circle Based Officers): 2964 இடங்கள் (பொது-1066, ஒபிசி-808, பொருளாதார பிற்பட்டோர்-260, எஸ்சி-494, எஸ்டி-336). தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 இடங்கள் காலியாக உள்ளன. 120 இடங்களில் (பொது- 49, ஒபிசி-32, எஸ்சி-18, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-12). இவற்றில் 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2. சம்பளம்: ரூ.48,480-85,920. வயது: 30.04.2025 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
3. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பொதுத்துறை/ கிராமிய வங்கிகளில் குறைந்தது 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் நன்றாக பேச, எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த 5 வருட பட்டம் பெற்றவர்கள், ஒன்றிய அரசின் இரட்டை பட்டப்படிப்பு (Dual Degree System) முறையின் கீழ் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சிஏ/ காஸ்ட் அக்கவுன்டன்ட் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
4. கட்டணம்: பொது மற்றும் ஒபிசி, பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.750/-. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் ஆங்கில மொழி, வங்கி அறிவு, பொது அறிவு, பொருளாதாரம், கணினி திறன் ஆகிய பாடங்களிலிருந்து 120 மதிப்பெண்களுக்கு ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகளும், ஆங்கில மொழியில் கடிதம் எழுதுதல் மற்றும் கட்டுரை எழுதுதல் தொடர்பான விரிவான விடையளிக்கும் வகையில் 50 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.
www.bank.sbi/web/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (29.05.2025).