மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தற்போதைய நிலை குறித்து பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தற்போதுதான் நீதிபதி நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் நீதிமன்ற விசாரணை முடிவடைந்துவிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பு தகவல் தெரிவித்தது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனு செப்டம்பர்.8க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.