சென்னை: அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் சசிகலாவின் சுற்றுப்பயணம் எடுபடாது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தடையாக இருக்கும் வரை அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி பாலிக்காது. 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதிமுகவில் இரட்டை இலைச் சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கை, சுயநலத்தை புரிந்து தொண்டர்கள் தக்க முடிவெடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.