தஞ்சாவூர் : சிறப்பு பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் இலச்சினை துணை முதலமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். துணை முதலமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் இன்று (7.11.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாரண, சாரணியர் இயக்கத்தின் 75 ஆவது நிறுவன நாள் கொடி, சிறப்புப் பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் (Bulletin), இலச்சினை (Logo) ஆகியவற்றை வெளியிட, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் .
அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக 75 ஆவது நிறுவன நாள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புப் பெருந்திரளணியின் தலைவராக, துணை முதலமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75 ஆவது நிறுவன நாள் ஒட்டுவில்லையை சாரணர்களின் சட்டையில் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., (தஞ்சாவூர்), மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., (திருச்சிராப்பள்ளி), பாரத சாரண, சாரணியர் இயக்க முதன்மை ஆணையர் முனைவர் க. அறிவொளி, பெருந்திரளணி சிறப்பு அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், மாநில தலைமையக ஆணையர்கள் .மார்ஸ், சண்முகவேல், முதன்மைக் கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை (தஞ்சாவூர்), கிருஷ்ணபிரியா (திருச்சிராப்பள்ளி), உள்பட பாரத சாரண, சாரணியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.