கிளீவ்லேண்டு: அமெரிக்காவின் கிளீவ்லேண்டு நகரில் ‘டென்னிஸ் இன் தி லேண்டு’ மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை சாரா சொர்ரிபிஸ்(26வயது, 46வது ரேங்க்), ரஷ்யா வீராங்கனை வெரோனிகா குதெர்மேடோவா(26வயது, 16வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சாரா ஒரு மணி 43 நிமிடங்களில் 6-4, 6-1 என நேர் செட்களில் வெரோனிகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யா வீராங்கனை ஏகதரினா அலெக்சாண்ட்ரோவா(28வயது, 22வது ரேங்க்), பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிக்(29வயது, 68வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர். அதில் ஏகதரினா ஒரு மணி 37 நிமிடங்களில் 7-6(6-2), 6-3 என நேர் செட்களில் வென்று காலிறுதியில் விளையாட தகுதிப் பெற்றார். மழை காரணமாக ஸ்லோன் ஸ்டீபன்ஸ்(அமெரிக்கா)-மிரா ஆண்ட்ரீவா(ரஷ்யா) இடையிலான ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டது.