சன்யாங் மோட்டார் கம்பெனி எனப்படும் தைவானை சேர்ந்த எஸ்ஒய்எம் நிறுவனம், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைக்காக ஏடிஎக்ஸ் 125 என்ற அட்வென்சர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 125 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் பிஎஸ் பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 11.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
15 லிட்டர் பெட்ரோல் டேங்க், 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, டிராக்ஷன் கன்ட்ரோல் ஏபிஎஸ், கீ லெஸ் இக்னிஷன் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியச் சந்தைக்கு எப்போது வரும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. விலை சுமார் ரூ.3.5 லட்சம் இருக்கலாம் என நிர்ணயிக்கப்படலாம் தெரிகிறது.