Friday, June 20, 2025
Home மருத்துவம்டயட் சான்யா மல்ஹோத்ரா ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

சான்யா மல்ஹோத்ரா ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

‘சிங்குசா சிங்குச்சா…‘ பாடல் ‘தக் லைஃப்‘ படத்தில் வைரலாகியிருக்கிறது. இப்பாடலில் சிம்புவோடு குத்தாட்டம் போடும் நடிகை சான்யா மல்ஹோத்ரா வடநாட்டு வரவு. சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்து, ஓடிடியில் ஹிட் அடித்த, ‘கதல்‘ படத்தில் நாயகியாகப் பின்னி பெடலெடுத்திருப்பார். அதே போல் ஜவான் படத்திலும் அழகான டாக்டராக வருவார்.

சான்யாவின் நடன அசைவுகளின் போது அவரது உடல் நளினமாக நெளிவதைப் பார்க்கவே பெருசுகள் முதல் இளசுகள் வரை ஒரு ரசிகப்பட்டாளம் காத்திருக்கும். தனது உடலை அவ்வளவு ஃபிட்டாகவும் ஹாட்டாகவும் வைத்திருக்கும் சான்யா மல்ஹோத்ராவின் ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ் என்னென்ன என்று பார்ப்போம்.வொர்க் அவுட்ஸ்: சின் அப் எனப்படும் வொர்க் அவுட்ஸ்தான் சான்யாவின் பெஸ்ட் சாய்ஸ் என்கிறார். கைகள், தோள்கள், முதுகு, பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ் ஆகியவற்றில் உள்ள தசையை வலுவாக்கி, நமது தோற்றத்தை ஃபிட்டாகவும் டைட்டாகவும் காட்டுவதற்கு சின் அப் அவசியம் என்கிறார்.மேலும் சின் அப்ஸால் உடலின் மேல் பாகம் மட்டும் வலுவாகுவதில்லை.

நம்முடைய கோர் மசில்ஸ் எனப்படும் உள்ளார்ந்த தசையும் வலுவாகிறது. நமது பிடிமானம் அதிகரிக்கிறது. உடலையும் மனதையும் ஒத்திசைவாக்குகிறது. இதனால் சின் அப் தினசரி செய்வேன் என்கிறார். வெயிட் லிஃப்டிங் செய்வேன். அதோடு நடைபயிற்சி, நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ வொர்க் அவுட்ஸ்க்கு முக்கிய இடம் உண்டு. மேலும், நடனமாடுவேன். இது என்னை புத்துணர்ச்சியாக்கி, உடலையும் மனதையும் லேசாக்குகிறது. ஓர் இறகு போல் நான் மிதப்பவளாக ஒரு நல்ல நடனத்துக்குப் பிறகு என்னை உணர்கிறேன் என்கிறார். பேலன்ஸிங் எக்சைர்ஸ் என்னை வலுவானவளாக மாற்றுகிறது. அதனையும் தவறாமல் செய்கிறேன் என்கிறார். யோகா என் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்துவதால் அதனையும் செய்வேன் என்கிறார்.

ஃபுட்ஸ்: ஆரோக்கியமான சமச்சீர் உணவே என்னுடைய ஹெல்த் மந்த்ராவுக்கான சாய்ஸ். எனவே, என் உணவில் எல்லாவகை சத்துக்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், தால் சாவல் எனப்படும் பருப்புச் சோற்றுக்கு நான் அடிமை. அதனோடு நெய் ஊற்றி உண்டால் கார்போ, ப்ரொட்டின், நல்ல கொழுப்பு அனைத்தும் உடலுக்குக் கிடைக்கும். அதே போலவே கிச்சடியும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதில் கார்ப்போவுடன் நல்ல காய்கறிகளால் வைட்டமின்கள் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்கும். மழை காலத்தில் கருப்பட்டி, கரும்பு ஜூஸ், கஞ்சி, வேர்க்கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், மத்தி மீன் என சாப்பிடுவேன். இதனால், கார்போ, புரதம், நல்ல கொழுப்பு ஆகியவை உடலுக்குக் கிடைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடிகிறது. நான் ஜங்க் ஃபுட்ஸ்களைச் சாப்பிடுவேன்தான்.

ஆனால், வொர்க் அவுட் இல்லாத சீட்டிங் நாட்களில் மட்டுமே அதை சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்திருக்கிறேன். காபி தினமுமே பருகுவேன். எனக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும் எனக்குப் பிடித்த தாஹி சால் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை நானே சமைப்பேன். அப்போதுதான் ருசியோடு எனக்கான ஆரோக்கியத்தையும் சரியாகப் பராமரிப்பதற்கான விஷயங்களை என் உணவில் சேகரிக்க முடியும் என்பதால் அதில் கவனமாக இருப்பேன்.

அழகு: என்றுமே மேக் அப் உடன் உறங்க மாட்டேன். இதுதான் என் சருமப் பராமரிப்புக்கான முதல் விதி. மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி என் முகத்தைக் கழுவிவிடுவேன். சன் ஸ்க்ரீனை அவசியம் பயன்படுத்துவேன். சுருள் சுருளாய் முடி இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்காக ஹேர் மாஸ்க், க்ர்ல் க்ரீம் பயன்படுத்துவேன். கண்டிஷ்னர்கள் பயன்படுத்துவேன். டெல்லிக்கும் மும்பைக்கும் சீதோஷ்ண வித்தியாசம் உண்டு. இதனால், ஊருக்குத் தகுந்தாற் போல் என் கூந்தலையும் சருமத்தையும் ஈரப்பதமாகவோ, உலர்ச்சியாகவோ
வைத்துக்கொள்வேன்.

தூக்கம் மற்றும் ஓய்வு: ஓடி ஓடி உழைப்பதைப் போலவே ஓய்வு எடுக்க வேண்டியதும் உடலுக்கு அவசியம். தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறேன். இயன்றவை இரவு நேர ஷூட்டிங் என்றால்கூட பகலில் தூங்கியாவது என் உறக்கத்தை ஈடுகட்டிவிடுவேன். வொர்க் அவுட் மற்றும் உணவில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சரியான உறக்கம் இல்லாவிடில் ஆரோக்கியம் என்பதற்கு உத்தரவாதமில்லை. அது போலவே ஓய்வு நேரத்தில் நல்ல இசை கேட்பேன். அது மனதை இதமாக்கி என்னை கவலைகள் மறக்கச் செய்கிறது.

தொகுப்பு: சரஸ்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi