சென்னை : திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே, ECR பிராதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் சிவகாமியை அதிவேகமாக வந்த கார் மோதியதில், நிலை தடுமாறி விழ, எதிர் சாலையில் வந்த லாரி மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி சென்ற நிலையில், கார் ஓட்டுநர் அஸ்வந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.