சென்னை: சங்கீதா மொபைல்ஸ் நிறுவனம், 51வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு ஒரு ரூபாய் மார்ஜின் விற்பனையை அறிவித்துள்ளது.
சங்கீதா மொபைல்ஸ் நிறுவனம் மொபைல் உபகரணங்கள் சந்தையில் கால் பதித்து 51வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, சங்கீதா ஷோரூமில் மொபைல், உபகரணங்கள் வாங்குவோருக்கு ரூ.5,001 மதிப்பிலான சலுகைகள் நிச்சயமாகக் கிடைக்கும். மொபைலை வாங்கிய பிறகு விலை குறைந்தால் அதிகபட்சமாக ரூ.10,000 வரை கேஷ்பேக் சலுகை, சிறந்த விற்பனையாகும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் மீது 50 சதவீதம் சலுகை, வாங்கும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 24 மாதங்களுக்கு சேதத்துக்கான பாதுகாப்பு, வாங்கிய போன் உடைந்து விட்டால், 2வதாக வாங்கும் மோபைல் மீது 70 சதவீத தள்ளுபடி சலுகை, எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளின் மீது 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.மேலும், சங்கீதா மொபைல் நிறுவனத்தின் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 30 நிமிடங்களில் வீட்டுக்கு டெலிவரி செய்யும் வசதி, பஜாஜ் பைனான்ஸ், டிவிஎஸ் கிரெடிட், எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்குகள் மூலம் ரூ.5,000 வரை கேஷ்பேக் உட்பட பல சலுகைகளை சங்கீதா மொபைல்ஸ் அறிவித்துள்ளது. சங்கீதா மொபைல்சுக்கு நாடு முழுவதும் 800 ஷோரூம்கள் உள்ளன.
சங்கீதா மொபைல்ஸ் அதிரடி சலுகை விற்பனை
0
previous post