நாமக்கல்: தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறந்து, பொதுமக்களுக்கு மணல் வழங்கக்கோரி, நேற்று நாமக்கல் அருகே கீரம்பூர் சுங்கசாவடி முன்பு, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர், சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்களை, போலீசார் கைது செய்தனர்.