சென்னை: ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் கலெக்டர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி சத்தியமூர்த்தியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி இருந்தால் அவர் மீது குண்டர் சட்டம் போட்டிருக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதுபோன்ற செயல்களுக்காக குண்டாஸ் போடக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து சத்திய மூர்த்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனிடையே மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.