காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில், சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து கடந்த 14 நாட்களாக தொழிற்சாலைக்குள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தற்போது வெளியே உள்ள தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அருகே வெள்ளை கேட் பகுதியில் பந்தல்கள் அமைத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், 3 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்ததை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியு அறிவித்தது. ஏற்கனவே, தொழிலாளர் நல ஆணையம் சங்க நிர்வாகிகள், சாம்சங் தொழிற்சாலை நிர்வாகிகளுடான மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டாததால், தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறனர்.
தற்போது, காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, நாளை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். அதில், சங்கம் சார்பில் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம், இல்லையென்றால் போராட்டம் தொடரும் என சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.